பெண்ணை துன்புறுத்திய வழக்கில் ஒருவருக்கு 3 ஆண்டு சிறை
பெண்ணை துன்புறுத்திய வழக்கில் ஒருவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
திருச்சி தில்லைநகர் சங்கீதபுரத்தில் நடந்து சென்ற பெண்ணை தகாத வார்த்தையால் திட்டியும், கையை பிடித்து இழுத்தும் துன்புறுத்தியதாக அதே பகுதியை சேர்ந்த அசோக்குமார்(வயது 49) மீது தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு திருச்சி கூடுதல் மகளிர் கோர்ட்டில் நீதிபதி மணிவாசகன் முன்னிலையில் விசாரணை நடந்தது. இந்த வழக்கில் அரசு வக்கீல் விசாலாட்சி ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் அசோக்குமார் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் அசோக்குமாருக்கு 3 ஆண்டுகள் மற்றும் 3 மாத சிறை தண்டனையும், ரூ.11 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.