டிரைவர் வீட்டில் நகை திருடிய வாலிபருக்கு 3 ஆண்டு சிறை

சேந்தமங்கலம் அருகே லாரி டிரைவர் வீட்டில் நகை திருடியவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நேற்று சேந்தமங்கலம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2023-09-15 18:42 GMT

சேந்தமங்கலம்

நகை திருட்டு

சேந்தமங்கலம் அருகே உள்ள சிவியாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஞானவேல் (வயது 28). லாரி டிரைவர். இவரது மனைவி கவுசிகா (22). இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 11-ந் தேதி இவர்கள் வீட்டில் இல்லாதபோது மர்மநபர்கள் இவர்களது வீட்டுக்குள் புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்து ½ பவுன் தங்க சங்கிலி, 2 குண்டுமணி, 2 தங்கத்தோடு, ரொக்கம் ரூ.3 ஆயிரம் ஆகியவைகளை மர்மநபர்கள் திருடி சென்றனர்.

இது சம்பந்தமாக ஞானவேல் சேந்தமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே நல்லிபாளையம் பகுதியில் 2 திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் என்கிற சுழியன் (32) என்பவரை சேந்தமங்கலம் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் சிவியாம்பாளையத்தில் உள்ள ஞானவேல் வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டார்.

3 ஆண்டுகள் சிறை

இந்த சம்பவம் குறித்து போலீசார் சதீஷ் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து அவரை கைது செய்து சேந்தமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி அரிகரன் நேற்று குற்றம் சாட்டப்பட்ட சுழியனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்