முன்னாள் ஊராட்சி தலைவருக்கு 3 ஆண்டு சிறை

பணம் கையாடல் செய்த வழக்கில் முன்னாள் ஊராட்சி தலைவருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-10-20 19:30 GMT

பெத்தநாயக்கன்பாளையம் தும்பல் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் (வயது 51). இவர் கடந்த 2016-ம் ஆண்டு தும்பல் ஊராட்சி தலைவராக இருந்த போது ரூ.7 லட்சத்து 73 ஆயிரத்து 300 கையாடல் செய்யப்பட்டதாக மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் 6-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்தது.

இந்த வழக்கில் விசாரணை அனைத்தும் முடிவடைந்ததால் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் பணம் கையாடல் செய்த குற்றத்திற்காக முன்னாள் ஊராட்சி தலைவர் கணேசிற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கமலக்கண்ணன் தீர்ப்பு அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்