திருப்பூர்:பெண்ணுக்கு 3 ஆண்டு சிறை
திருப்பூர் முருகம்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியில் வசித்து வந்த நாச்சம்மாள் (வயது 87) என்பவரை கடந்த 22-1-2020 அன்று அரிவாளால் நெற்றியில் வெட்டி விட்டு அவர் அணிந்திருந்த 2¾ பவுன் சங்கிலி, பையில் இருந்த ரூ.6 ஆயிரத்தை வழிப்பறி செய்து விட்டு பெண் தப்பினார். இதுதொடர்பாக வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லம்நகரை சேர்ந்த சங்கிலி என்பவரின் மனைவி புஷ்பம் (50) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்த வழக்கு விசாரணை திருப்பூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. புஷ்பத்துக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.2,000 அபராதம் விதித்து நீதிபதி புகழேந்தி தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்த வீரபாண்டி போலீசாரை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு பாராட்டினார்.