பணம் அபேஸ் செய்த 3 பெண்கள் பிடிபட்டனர்

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் பணம் அபேஸ் செய்த 3 பெண்கள் பிடிபட்டனர்.

Update: 2023-03-29 20:11 GMT

நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் நேற்று மாலையில் பெண் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது அங்கு பாப்பாக்குடியை சேர்ந்த கமலா என்ற பெண்ணின் பையில் இருந்த பணத்தை பெண் ஒருவர் எடுத்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அங்கு சந்தேகப்படும் படியாக நின்ற 3 பெண்களை பிடித்து பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரணையில் அவர்கள் ராஜபாளையம் ரெயில்வே பீடர் ரோட்டை சேர்ந்த செல்வம் மனைவி செல்வி (வயது 29), அந்தோணி மனைவி வள்ளி (27), கண்ணன் மனைவி காயத்ரி (21) ஆகியோர் என்பதும் அவர்கள் கமலா பையில் இருந்த பணத்தை திருடியதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசாா் வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ1,500 பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்