மணல் கடத்திய 3 லாரிகள் பறிமுதல்

மணல் கடத்திய 3 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன

Update: 2022-12-21 21:21 GMT

காரைக்குடி,

புதுவயல் அரசு ஆஸ்பத்திரி அருகே சாக்கோட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 லாரிகளை போலீசார் மறித்தனர். அப்போது லாரியை நிறுத்திவிட்டு டிரைவர்கள் இருவரும் கீழே இறங்கி தப்பி ஓடி விட்டனர். லாரியில் சோதனை செய்த போது அதில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மணல் கடத்திய 2 லாரிகளையும் பறிமுதல் செய்தனர். அதேபோல் நாகநாதபுரம் பகுதியில் இளையான்குடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது மணல் கடத்திய லாரியை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பாஸ்கரன்(வயது 28) என்பவரை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்