மின்னல் தாக்கியதில் 3 மரங்கள் எரிந்து நாசம்

காட்டுமன்னார்கோவில் அருகே மின்னல் தாக்கியதில் 3 மரங்கள் எரிந்து நாசமானது.

Update: 2022-10-18 19:25 GMT

காட்டுமன்னார்கோவில்:

காட்டுமன்னார்கோவில் பகுதியில் நேற்று மாலை இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் லால்பேட்டை அம்பேத்கர் தெருவை சேர்ந்த மாரிமுத்து என்பவரது வீட்டில் இருந்த தென்னை மரமும், காட்டுமன்னார்கோவில் திருமூலஸ்தானத்தை சேர்ந்த கைலாசமூர்த்தி என்பவரது வீட்டில் இருந்த தென்னை மரமும், காட்டுமன்னார்கோவிலில் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் உள்ள புளியமரமும் தீப்பிடித்து எரிந்தது. இது பற்றி அறிந்ததும் காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து அனைத்தனர். இருப்பினும் 3 மரங்களும் தீயில் எரிந்து நாசமானது. 

Tags:    

மேலும் செய்திகள்