மாணவர்கள் போராட்டம் எதிரொலி:சேலம் வழியாக இயக்கப்படும் 3 ரெயில்கள் ரத்து

மாணவர்கள் போராட்டம் எதிரொலியாக சேலம் வழியாக இயக்கப்படும் 3 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

Update: 2022-06-17 22:59 GMT

சூரமங்கலம்:

நாடு முழுவதும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது, இதையொட்டி ெரயில்வே நிர்வாகம் பாதுகாப்பு நடவடிக்கையாக சேலம் வழியாக செல்லும் எர்ணாகுளம்- பரௌனி வாராந்திர எக்ஸ்பிரஸ் ெரயில் (12522) நேற்று எர்ணாகுளம் ெரயில் நிலையத்தில் இருந்து காலை 10.50 மணிக்கு புறப்பட்டு ஈரோடு ெரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்பட்டது. ஈரோடு- பரௌனி வரை பகுதியாக ரத்து செய்யப்பட்டது, செகந்திராபாத்- திருவனந்தபுரம் சபரி எக்ஸ்பிரஸ் ெரயில் (17230) சேவை நேற்று முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது, மேலும் திருவனந்தபுரம்- செகந்திராபாத் சபரி எக்ஸ்பிரஸ் ரெயில் (17229) சேவை நாளை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. மேற்கண்ட தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்,

Tags:    

மேலும் செய்திகள்