தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பஸ்களில் 3 மடங்கு கட்டணம் அதிகரிப்பு - பயணிகள் அதிர்ச்சி

தீபாவளி பண்டிகையை ஒட்டி ஆம்னி பஸ்களில் வழக்கமான கட்டணத்தை விட 3 மடங்கு கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-09-21 04:41 GMT

சென்னை,

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில், பொதுமக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல பேருந்துகளில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி ஆம்னி பஸ்களில் வழக்கமான கட்டணத்தை விட 3 மடங்கு கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சென்னையில் இருந்து மதுரைக்கு செல்ல ரூ.3000 கட்டணம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, இரண்டு முதல் மூன்று மடங்கு கட்டணம் உயர்ந்துள்ளதால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே, இதற்கு அரசு கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்