கஞ்சா கடத்திய 3 வாலிபர்கள் கைது
கள்ளக்குறிச்சி அருகே கஞ்சா கடத்திய 3 வாலிபர்களை போலீசாா் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி போலீசார் நீலமங்கலம் கூட்டுரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தியாகதுருகம் பகுதியிலிருந்து கள்ளக்குறிச்சி நோக்கி ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்களை மடக்கி சோதனை செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிள் டேங்க் கவரில் 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் அவினாஷ்(வயது 22), சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த ராஜன் மகன் சசிகுமார்(24), கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள வைடிப்பாக்கம் பகுதியை சேர்ந்த கென்னடி மகன் சந்துரு(23) என்பதும், கஞ்சாவை கடத்தி விற்பனைக்காக கொண்டு செல்ல முயன்றபோது போலீசாரிடம் சிக்கியதும் தொியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசாா் அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.