ரெயில் நிலையத்தில் குழந்தையை விட்டுச்சென்ற தாயை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு

காட்பாடி ரெயில் நிலையத்தில் 6 மாத பெண் குழந்தையை மூதாட்டியிடம் அனாதையாக விட்டுச்சென்ற தாயை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது.

Update: 2023-05-04 11:11 GMT

காட்பாடி ரெயில் நிலையத்தில் 6 மாத பெண் குழந்தையை மூதாட்டியிடம் அனாதையாக விட்டுச்சென்ற தாயை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது.

குழந்தையை விட்டுச்சென்ற பெண்

சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் சுந்தரி (வயது 63). இவர் காட்பாடி ரெயில் நிலையத்தில் ரெயிலுக்காக காத்திருந்தார். அப்போது அவரிடம் கை குழந்தையுடன் வந்த பெண் ஒருவர், தனது 6 மாத பெண் குழந்தையை கொடுத்துவிட்டு சிறிது நேரத்தில் வருவதாக கூறிவிட்டு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் அந்த பெண் வராததால் பதற்றம் அடைந்த சுந்தரி குழந்தையை ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தார்.

அதனையடுத்து காட்பாடி ரெயில்வே போலீசார் ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண் தனது குழந்தையை மூதாட்டியிடம் கொடுத்துவிட்டு கணவர் மற்றும் 2 குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஆட்டோவில் ஏறி சென்றது தெரியவந்தது.

3 தனிப்படைகள் அமைப்பு

இந்த சம்பவம் தொடர்பாக குழந்தையை அனாதையாக விட்டுச்சென்ற பெண்ணை பிடிக்க ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் காட்பாடி ரெயில் நிலையத்திலி் இருந்து ஆட்டோவில் கிளம்பிய அந்த பெண் வேலூர் பஸ் நிலையம் சென்று அங்கிருந்து திருவண்ணாமலைக்கு பஸ் ஏறி சென்றது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து போலீசார் அவரை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்