3 வணிக நிறுவனங்களுக்கு 'சீல்' வைப்பு

நெல்லையில் வரி செலுத்தாத 3 வணிக நிறுவனங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

Update: 2023-03-14 20:52 GMT

நெல்லை மாநகராட்சியில் நடப்பு நிதி ஆண்டுக்கான வரி வசூல் பணிகள் இந்த மார்ச் மாதம் 31-ந்தேதிக்குள் முடிவடைகிறது. எனவே பொதுமக்கள் வரி செலுத்துவதற்கு அதிகமானோர் வருவார்கள் என்பதால் 4 மண்டலங்களில் கூடுதலாக தலா 1 கணினி வரி வசூல் கவுன்ட்டர்கள் அமைத்து வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மாநகராட்சிக்கு நீண்ட காலமாக சொத்து வரி பாக்கி வைத்திருந்த எஸ்.என்.ஹைரோட்டில் உள்ள 3 வணிக நிறுவனங்களுக்கு மாநகராட்சி உதவி ஆணையாளர் (வருவாய்) டிட்டோ தலைமையில் அலுவலர்கள் நேற்று சென்றனர். அவர்கள் அந்த 3 நிறுவனங்களின் கட்டிடங்களை மூடி சீல் வைத்தனர்.

எனவே வருகிற 31-ந் தேதிக்குள், மாநகராட்சிக்கு நீண்டகாலமாக சொத்து வரி பாக்கி வைத்திருக்கும் வணிக வளாகம், திருமண மண்டப உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் நெல்லை மாநகராட்சி கணினி வரி வசூல் மையங்களில் உடனடியாக வரியை செலுத்தி, சீல் வைப்பு நடவடிக்கையை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த தகவலை, நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்