மோட்டார் சைக்கிள்கள் மோதல் தம்பதி உள்பட 3 பேர் படுகாயம்

விழுப்புரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல் தம்பதி உள்பட 3 பேர் படுகாயம்

Update: 2022-12-05 18:45 GMT

செஞ்சி

விழுப்புரம் அருகே உள்ள வளவனூரை சேர்ந்தவர் முருகன் மகன் அருள்(வயது 29). இவர் சம்பவத்தன்று அவரது மனைவி வேண்டாமிர்தம்(28), மகன் வெற்றி(8) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் செஞ்சிக்கு சென்று விட்டு அங்கிருந்து மீண்டும் விழுப்புரம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அசோகபுரி அருகே வந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் அருள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கணவன், மனைவி மற்றும் மகன் ஆகிய 3 பேரையும் அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூாி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் கெடார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்