நகை பறிப்பு, மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது

நகை பறிப்பு, மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-11-19 18:18 GMT

அரக்கோணம்

நகை பறிப்பு, மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரக்கோணம் டவுன் போலீசார் நேற்று முன்தினம் திருவள்ளூர் ரோடு சில்வர் பேட்டை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பேசினர்.அவர்களை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தபோது அவர்கள் அரக்கோணத்தை அடுத்த மோசூர் பகுதியை சேர்ந்த சத்தியா என்கிற சக்தி (வயது 23), தக்கோலத்தை அடுத்த உரியூரை சேர்ந்த நரேஷ் (25), பிரகாஷ் (20). என்பது தெரிய வந்தது.

இதில் சக்தி மீதுபல்வேறு வழக்குகள் இருப்பதும், 3 பேரும் நகை பறிப்பு, மோட்டார்சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து விலை உயர்ந்த 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 2½ பவுன் செயின் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்