மணல்அள்ள முயன்ற 3 பேர் கைது

மணல்அள்ள முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-07-27 18:42 GMT

குளித்தலை போலீசார் குளித்தலை பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குளித்தலை அருகே உள்ள வதியம் காவிரி ஆற்று பகுதியில் லாரியில் மணல் ஏற்றி கடத்தப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, சிலர் லாரியில் மணலை ஏற்றிக்கொண்டு இருந்துள்ளனர். போலீசார் வருவதை பார்த்த அவர்கள் அங்கிருந்து தப்பியோட முயற்சித்துள்ளனர். போலீசார் 3 பேரை விரட்டி பிடித்துள்ளனர். 2 பேர் அங்கிருந்த சரக்கு வேனில் தப்பி சென்றுள்ளனர். இதையடுத்து 4½ யூனிட் ஆற்றுமண் ஏற்றப்பட்ட லாரியையும், ஒரு காரையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் ஆற்று மணலை லாரியில் ஏற்றி கடத்த முயன்ற நாமக்கல் மாவட்டம் போத்தனூர் பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 28), திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள தைலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சரவணன்(47), தொட்டியம் பகுதியை சேர்ந்த சுதாகர்(40), குளித்தலை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் ஜெயபால்ராஜ் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கார்த்தி, சரவணன், சுதாகர் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மணிகண்டன், ஜெயபால்ராஜ் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்