சாராயம் காய்ச்சிய 3 பேர் சிக்கினர்

சிவகிரி அருகே சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-07-22 15:58 GMT

சிவகிரி:

சிவகிரி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிவகிரி அருகே உள்ள உள்ளாருக்கு மேற்கே கருவாட்டுப்பாறைக்கு வடக்குபுறம் ஒருவரது தோட்டத்தில் சாராயம் காய்ச்சியது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சிவகிரி அருகே உள்ள ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஜெயக்குட்டி (வயது 47), மாரிமுத்து (40), ஜெயராமன் மகன் காளிராஜ் (22) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சாராயம் காய்ச்ச பயன்படுத்தும் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்