ஏரியூர்
ஏரியூர் அருகே உள்ள மஞ்சாரஅள்ளி ஊராட்சி செல்லமுடியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 28). தொழிலாளி. இவருடைய மனைவி நவநீதா (20). இவர்களுக்கு 10 மாத ஆண் குழந்தை உள்ளது. கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று மதியம் ஏற்பட்ட தகராறு காரணமாக நவநீதா மனமுடைந்தார். மேலும் அவர் மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து ஏரியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.