கம்மாளப்பட்டி எருது விடும் நிகழ்ச்சி: காளை முட்டி ஊர்காவல் படை வீரர் உள்பட 3 பேர் காயம்

கம்மாளப்பட்டி எருது விடும் நிகழ்ச்சியில் காளை முட்டி ஊர்காவல் படை வீரர் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2022-06-11 15:37 GMT

பாப்பாரப்பட்டி:

பாப்பாரப்பட்டி அருகே உள்ள கம்மாளப்பட்டி கிராமத்தில் ஊமை செல்லியம்மன் கோவில் திருவிழாவையொட்டி எருது விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 16 கிராமத்தை சேர்ந்த காளைகள் பங்கேற்றன. காளையை இளைஞர்கள் கயிறு கட்டி பிடித்து வந்தனர். அப்போது காளையின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிறு கழன்றதால் காளை சீறிப்பாய்ந்து கூட்டத்தில் புகுந்தது. சீறி பாய்ந்து வந்த காளை கூட்டத்தில் இருந்தவர்களை முட்டி தள்ளி தூக்கி வீசியது. இதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ஊர்காவல் படை வீரர் சீனிவாசன், முதியவர் கோபால் உள்ளிட்ட 3 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்