போதை மாத்திரைகள் விற்ற 3 பேர் சிக்கினர்

போதை மாத்திரைகள் விற்ற 3 பேர் சிக்கினர்

Update: 2023-08-04 19:32 GMT

அரியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருவானந்தம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அரியமங்கலம் காமராஜ் நகர் சவுகத் அலி தெருவை சேர்ந்த சாகுல்ஹமீது மகன் அசார் என்ற அசார் முகமது (வயது 23), திருச்சி காந்தி மார்க்கெட் காமராஜர் நகரை சேர்ந்த ரத்தினம் மகன் வசந்த் (18), திருச்சி இ.பி ரோடு அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த சஞ்சை சச்சின் (22) ஆகியோர் போதை மாத்திரைகள் விற்றுக்கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை கைது செய்து போதை மாத்திரைகளையும், ரூ.4,500 பணத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர் 3 பேரையும் திருச்சி 6-வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் கைதான சஞ்சை சச்சின் மீது கொலை வழக்கும், வசந்த் மீது திருட்டு வழக்கும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்