என்ஜினீயரிடம் செல்போன் பறித்த சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது
என்ஜினீயரிடம் செல்போன் பறித்த சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யட்டனர்.
பொன்மலைப்பட்டி, ஜூன்.26-
திருச்சி சுப்பிரமணியபுரம் ராஜா தெருவை சேர்ந்தவர் ஆலிவர்ஜோன்ஸ் (வயது 27). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், கடந்த 21-ந்தேதி பொன்மலை ஜி கார்னர் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 சிறுவர்கள் உள்பட 3 பேர், கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து செல்போனை பறித்துச்சென்றனர். இதுகுறித்து அவர் பொன்மலை போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருவானந்தம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், ஆலிவர்ஜோன்சிடம் செல்போனை பறித்துச்சென்றது, திருச்சி சுப்பிரமணியபுரம் மணிமேகலை வீதியை சேர்ந்த வசந்த் (22) மற்றும் பொன்மலை மற்றும் கே.கே.நகரை சேர்ந்த 15 வயது சிறுவர்கள் 2 பேர் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.