காரில் புகையிலை பொருட்கள் கடத்திய 3 பேர் கைது
மானூர் அருகே காரில் புகையிலை பொருட்கள் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மானூர்:
மானூர் அருகே உள்ள வேப்பங்குளம் பகுதியில், மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தியதில், 43½ கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காரில் புகையிலை பொருட்களை கடத்தி வந்ததாக, தச்சநல்லூர் அருகே உள்ள கரையிருப்பைச் சேர்ந்த இசக்கி பாண்டி (வயது 41), கீழக்கரையைச் சேர்ந்த முருகன் மகன் விக்னேஷ் (23), பிரான்குளத்தைச்சேர்ந்த மாரியப்பன் மகன் சிவா (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் புகையிலை பொருட்களுடன் கார், 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.