புகையிலை பொருட்களை காரில் கடத்தி வந்த 3 பேர் கைது
புகையிலை பொருட்களை காரில் கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் ரோந்து
புதுக்கோட்டை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கஞ்சா விற்பனையை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே நேற்று முன்தினம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த காரை மடக்கி சோதனையிட்டனர். அதில் புகையிலை பொருட்களை விற்பனைக்காக கடத்தி வந்தது தெரியவந்தது.
3 பேர் கைது
இதில் மொத்தம் 37½ கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.74 ஆயிரம் ஆகும். மேலும் அதனை கொண்டு வந்த தஞ்சாவூரை சேர்ந்த முத்துக்குமார் (வயது 37), புதுக்கோட்டை வெட்டன்விடுதியை சேர்ந்த தமிழரசன் (38), ஆலங்குடியை சேர்ந்த கென்னடி (44) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் கார், 2 செல்போன்கள், ரூ.1,000 ஆகியவற்றை கைப்பற்றினர்.