லாரியில் மண் கடத்திய 3 பேர் கைது
பணகுடியில் லாரியில் மண் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பணகுடி:
பணகுடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜமால் பணகுடி பகுதியில் ரோந்து சென்றார். அப்போது அனுமதியின்றி லாரியில் குளத்து மண் கடத்தி வந்த காவல்கிணறு காமராஜ் தெருவை சேர்ந்த தவசிவன் மகன் சதீஷ் (வயது 23), ஆவரைகுளத்தைச் சேர்ந்த இளங்கோ மகன் லெனின் (23), ஆரல் குமாரபுரத்தைச் சேர்ந்த குணசேகரன் மகன் ஜேம்ஸ் (43) ஆகிய 3 பேரையும் கைது செய்தார். லாரியை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.