புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது

புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-08-22 18:12 GMT

கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா தலைமையிலான போலீசார் கரூரில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கரூர் உழவர் சந்தை அருகே உள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக அந்த கடையின் உரிமையாளர் பிரபு (வயது 39) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.இதேபோல் வாங்கல் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் புகையிலை பொருட்கள் விற்றதாக காஜா மைதீன் (30), மதிவாணன் (52) ஆகிய 2 பேரையும் வாங்கல் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்