புகையிலை, மது விற்ற 3 பேர் கைது

கோத்தகிரியில் புகையிலை, மது விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-09-08 20:00 GMT

கோத்தகிரி

கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா?, டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு முன் அனுமதி இன்றி மது பாட்டில்கள் விற்கப்படுகிறதா? என கோத்தகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பப்பிலா ஜாஸ்மின் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது பெப்பேன் கிராமத்தில் ஒருவர் மது விற்றது தெரியவந்தது. விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த தேவராஜ் (வயது 38) என்பதும், கூடுதல் விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து அவரை போலீசார் கைது செ்யதனர். அவரிடம் இருந்து 15 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் கோத்தகிரி ரைபிள் ரேஞ்ச் பகுதியில் அப்துல் நசீர் என்பவரது கடையில் சோதனை செய்த போது, தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் வைத்திருப்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 24 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் கோத்தகிரி பஸ் நிலையம் மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே கடையில் புகையிலை பொருட்கள் விற்ற வள்ளியம்மாளை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்