மதுபாட்டில்கள் விற்ற 3 பேர் கைது
திருநாவலூர் பகுதியில் மதுபாட்டில்கள் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருநாவலூர்,
திருநாவலூர் சப்-இன்ஸ்பெக்டர் ராமதாஸ் தலைமையிலான போலீசார் கள்ளமேடு கிராமத்தில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு ரங்கநாதன் என்பவரது வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். இதில் அங்கு மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரிந்தது. இதையடுத்து அங்கிருந்த 6 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மதுபாட்டில்களை விற்பனை செய்தது தொடர்பாக ரங்கநாதனை போலீசார் கைது செய்தனர். இதே போல் பிள்ளையார்குப்பம் பஸ் நிறுத்தம் அருகில் மதுபாட்டில்கள் விற்றதாக திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஆமூர் கிராமத்தை சேர்ந்த அய்யனார் (42) என்பவரையும், நைனாகுப்பம் கிராமத்தில் மது பாட்டில்கள் விற்பனை செய்ததாக லட்சுமி (45) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 14 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.