மதுபாட்டில்கள் விற்ற 3 பேர் கைது

சின்னசேலம் அருகே மதுபாட்டில்கள் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-07-24 18:45 GMT

சின்னசேலம், 

சின்னசேலம் அருகே காளசமுத்திரம் பகுதியில் கீழ்குப்பம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த தேவராஜ் (வயது 37) என்பவர் தனது வீட்டின் பின்புறத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதைபார்த்த போலீசார், அவரை கைது செய்தனர். இதேபோல் மதுபாட்டில்கள் விற்றதாக கீழ்குப்பத்தை சேர்ந்த திருநாவுக்கரசு (47), சின்னமணி (30) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து மொத்தம் 19 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்