மதுவிற்ற 3 பேர் கைது

மதுவிற்ற 3 பேர் கைது

Update: 2023-10-11 19:45 GMT

கணபதி

கோவை ரத்தினபுரி பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனையில் சில கும்பல் ஈடுபடுவதாக ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த புதுக்கோட்டை மாவட்டம் ரமேஷ்குமார் (வயது37), நம்பிவயலைச் சேர்ந்த பாண்டியன் (38), திருமணஞ்சேரியைச் சேர்ந்த சத்திவேல் (25) ஆகிய 3 பேர் பிடிபட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து, அவர்களிடம் இருந்து 136 மதுபாட்டில்கள், ரொக்கப்பணம் ரூ.4,790-ஐ பறிமுதல் செய்தனர். பின்னர் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்