மது விற்ற 3 பேர் கைது

மது விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-06-26 18:13 GMT

தோகைமலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஆலத்தூர் ஊராட்சி அண்ணாநகர் பகுதியை சேர்ந்த குழந்தைவேல் (வயது 63), கல்லடை ஊராட்சி அண்ணாநகரை சேர்ந்த அன்பழகன் மனைவி ஜல்ஜா (34) ஆகியோர் தங்களது பெட்டிக்கடைகளிலும், அதே பகுதியை சேர்ந்த ராமலிங்கம் (57) என்பவர் தனது வீட்டின் பின்புறமும் மதுவை பதுக்கி வைத்து விற்றுக் கொண்டிருந்தனர். இதையடுத்து குழந்தைவேல், ஜல்ஜா, ராமலிங்கம் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்