என்ஜினீயரிடம் வழிப்பறி செய்த 3 பேர் கைது
மதுரையில் என்ஜினீயரிடம் வழிப்பறி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை தல்லாகுளம் கிருஷ்ணாபுரம் காலனியை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 39). என்ஜினீயரான இவர், மதுரை ரெயில் நிலையத்தில் நடந்து வரும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் பிரேம்குமார் வீட்டின் அருகே நடந்து சென்றபோது அங்கு வந்த, 3 பேர் அவரை வழிமறித்து தகராறு செய்தனர். மேலும் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த பணத்தை பறித்துள்ளனர். இதுகுறித்து அவர், தல்லாகுளம் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில், வழிப்பறி செய்தவர்கள் முல்லை நகரை சேர்ந்த தினேஷ் குமார் (22), கணேசன் (24), சந்துரு (19) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.