புகையிலை பொருட்கள் வைத்திருந்த 3 பேர் கைது

தொண்டி பகுதியில் புகையிலை பொருட்கள் வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-06-30 18:37 GMT

தொண்டி,

தொண்டி புதிய பஸ் நிலையம் அருகில் சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணு தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் நடத்திய சோதனையில் 206 புகையிலை பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கோபி (வயது 32) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் எஸ்.பி.பட்டினத்தில் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் ஒரு கடையில் நடத்திய சோதனையில் தடை செய்யப்பட்ட 15 புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக உதயகுமார்(38) என்பவரை கைது செய்தனர். திருவாடானை சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் திருவாடானை சன்னதி தெருவில் உள்ள ஒரு கடையில் சோதனை நடத்தியபோது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றினர். இதுதொடர்பாக மகாலிங்கம்(50) என்பவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்