அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 3 பேர் கைது

அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 3 பேர் கைது

Update: 2023-03-16 20:19 GMT

திருவையாறு பகுதியில் மாட்டுவண்டியில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து நடுக்காவேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மாட்டுவண்டிகளை மறித்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. பின்னர் மாட்டுவண்டியில் வந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் திருவையாறை அடுத்த வீரசிங்கம்பேட்டை இந்திராநகரை சேர்ந்த ஹரிஹரன் (வயது19), அதே பகுதி மேலத்தெருவை சேர்ந்த விக்னேஷ் (28), நடுத்தெருவை சேர்ந்த சக்கரவர்த்தி (34) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதுகுறித்து நடுக்காவேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 3 மாட்டுவண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்