தொழில் அதிபரை பட்டாக்கத்தியால் வெட்டி நகை பறித்த 3 பேர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தொழில் அதிபரை பட்டாக்கத்தியால் வெட்டி நகை பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-06-06 20:09 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,


ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தொழில் அதிபரை பட்டாக்கத்தியால் வெட்டி நகை பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தொழில் அதிபர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கொத்தங்குளம் பகுதியில் ராஜபாளையம் செவல்பட்டியை சேர்ந்த உதயகுமார் (வயது 30) என்பவர் கார்பன் தொழிற்சாலை நடத்தி வந்தார். கடந்த சில மாதங்களாக இந்த தொழில் நடைபெறவில்லை என கூறப்படுகிறது.

எனவே அந்த இடத்தை ஒதுக்கி சுத்தப்படுத்தி வாடகைக்கு விட முடிவு செய்தார். அந்த இடத்தை சுத்தப்படுத்திக் கொண்டிருக்கும் போது கம்பெனி சுவற்றில் 7 பேர் உட்கார்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர். அவர்களிடம் இங்கு மது அருந்தாதீர்கள் என்று கூறி அவர்களை அங்கிருந்து செல்லுமாறு கூறினார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.

நகை பறிப்பு

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 7 பேரில் 4 பேர் மீண்டும் அங்கு வந்தனர். அவர்கள் 4 பேரும் தொழில் அதிபரை பட்டா கத்தியால் வெட்டி அவரிடம் இருந்த தங்க நகை, வைர மோதிரம் ஆகியவற்றை பறித்து சென்றனர்.

இதுகுறித்து வன்னியம்பட்டி போலீசில் உதயகுமார் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். விசாரணையில் அருப்புக்கோட்டையை சேர்ந்த அருண்பாண்டியன் (27) உள்பட 4 பேர் சேர்ந்து தொழில் அதிபரை பட்டாக்கத்தியால் வெட்டியது தெரியவந்தது. இதையடுத்து அருண்பாண்டியன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து தங்க செயின், வைர மோதிரம் பறிமுதல் செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்