பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது

மேமாலூரில் பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது

Update: 2023-01-16 18:45 GMT

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள மேமாலூர் கிராமத்தில் பணம் வைத்து சூதாட்டம் ஆடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் தலைமையிலான போலீசார் மேமாலூர் கிராமத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கே பணம் வைத்து சூதாட்டம் ஆடிக்கொண்டிருந்த விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரை சேர்ந்த வினோத்குமார்(வயது 42), பிரவீன்குமார்(33), துலாம்பூண்டி கிராமம் ராமதாஸ்(37) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்