அனுமதியின்றி மண் அள்ளிய 3 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் அனுமதியின்றி மண் அள்ளிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-06-27 18:45 GMT

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரெங்கம் பகுதியில் டிராக்டரில் மண் ஏற்றி விற்பனையில் ஈடுபட்டு வருவதாக திருத்துறைப்பூண்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் பேரில் அந்த பகுதியில் திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி மண் ஏற்றி விற்பனையில் ஈடுபட்ட ஆதிரங்கம் குடிசேத்தி பகுதியைச் சேர்ந்த தமிழ்வாணன் (வயது20), சண்முகசுந்தரம் (53), சேகல் பகுதியைச் சேர்ந்த பொக்லின் எந்திர டிரைவர் செந்தில்குமார் (27) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 பொக்லின் எந்திரங்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்