போலீசாரிடம் தகராறில் ஈடுபட்ட 3 பேர் கைது

கீழ்வேளூரில் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-10-27 18:45 GMT

சிக்கல்:

கீழ்வேளூர் பேரூராட்சி பகுதிகளில் நேற்று முன்தினம் கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது வடக்கு வீதி பகுதியில் உள்ள தேரடி அருகில் கீழ்வேளூர் வடக்கு வெளியை சேர்ந்த கருணாநிதி மகன் கவியரசன் (வயது 26), தெற்கு வெளி கவுதமன் மகன் சண்முகபாண்டியன் (22), போலீஸ் காலனி பகுதியை சேர்ந்த ரங்கசாமி மகன் பிரகாஷ் (24) ஆகிய 3 பேர் நின்று உள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது 3 வாலிபர்களும், போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.மேலும் போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டியும், மிரட்டல் விடுத்து, அரசு பணியை செய்ய விடாமல் தடுத்துள்ளனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவியரசன், தெற்கு வெளி சண்முகபாண்டியன், போலீஸ் காலனி பகுதியை சேர்ந்த ரெங்கசாமி மகன் பிரகாஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்