அரியலூரில் கொரோனாவுக்கு 3 பேர் சிகிச்சை
அரியலூரில் கொரோனாவுக்கு 3 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அரியலூர் மாவட்டத்தில் நேற்று யாரும் கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை. ஏற்கனவே கொரோனாவினால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் இருந்த 4 பேரில், ஒருவர் குணமடைந்துள்ளார். மாவட்டத்தில் 50 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது.