வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது

மங்கலம்பேட்டை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2023-01-30 18:45 GMT

மங்கலம்பேட்டை, 

விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள பில்லூரை சேர்ந்தவர் பஷீர் முகமது (வயது 38). இவர் கடந்த 28-ந்தேதி இரவு தனது மோட்டார் சைக்கிளில் மங்கலம்பேட்டை புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த 3 பேர் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி, அவரது செல்போன் மற்றும் 750 ரூபாய் பணத்தை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதில் சென்னை வடபழனியை சேர்ந்த பிரதாப் மகன் தாமோதரன் (வயது 19), சென்னை தண்டையார்பேட்டை மணி மகன் ராஜி (22), விருத்தாசலம் அடுத்த விஜயமாநகரம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த பழனிவேல் மகன் சுகுமாரன் (20) ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதுகுறித்து மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து தாமோதரன், ராஜி, சுகுமாரன் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்