பட்டாசு ஆலை விபத்தில் 3 பேர் படுகாயம்
பட்டாசு ஆலை விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
தாயில்பட்டி,
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியம் கீழச்செல்லையாபுரத்தை சேர்ந்த குருநாதன் (வயது 48) என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள சானான்குளம் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் 15 அறைகளில் 20-க்கும் மேற்பட்டவர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்தநிலையில் பட்டாசுக்கு மணிமருந்து செலுத்தும்போது ஏற்பட்ட உராய்வினால் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலைய அதிகாரி செந்தூர் பாண்டியன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் அங்கு பணியில் இருந்த மத்திய பிரதேசத்தை சேர்ந்த ராம்பால் ஆஜி (வயது 25), சந்தீப் குமார் (24), வினோத் ராம்பால் (25) ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
இவர்களை உடனே மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வெம்பக்கோட்டை தாசில்தார் ரங்கநாதன், சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வினோஜி, வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் ஆகியோர் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து ஏழாயிரம் பண்ணை வருவாய் ஆய்வாளர் சாமுவேல், போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து பட்டாசு ஆலை உரிமையாளர்கள் குருநாதன், மகேந்திரகுமார், ஒப்பந்தக்காரா் வைரமுத்து, மேலாளர் ஆறுமுகம் (50) ஆகிய 4 பேர் மீது ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தனர்.