மது விற்ற பெண்கள் உள்பட 3 பேர் கைது

மது விற்ற பெண்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-05-03 18:28 GMT

அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் பகுதியில் மது விற்பதாக பல்வேறு புகார் வந்தது. இதன்பேரில் விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஸ்ரீபுரந்தான் மெயின்ரோட்டை சேர்ந்த சேட்டு மனைவி கவிதா (வயது 46), பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த மதியழகன் மனைவி ஈஸ்வரி (50) ஆகியோர் தங்களது வீட்டின் பின்புறம் மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல் தா.பழூர் அருகே உள்ள கோடாலி செல்லும் பிரிவு சாலையில் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றித்திரிந்த ஒருவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் அமிர்தராயக்கோட்டை காலனி தெருவை சேர்ந்த விஜயகுமார் (33) என்பது தெரியவந்தது. பின்னர் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது 45 மதுபாட்டில்களை விற்பனைக்காக கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்