மதுபானம் விற்ற பெண் உள்பட 3 பேர் கைது
போடியில் மதுபானம் விற்ற 3 பேரை போலீசாா் கைது செய்தனர்.
போடி தாலுகா போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போடி அருகே உள்ள முத்தையன் செட்டிபட்டி, நாகலாபுரம், லட்சுமிநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களில் கையில் பையுடன் 3 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் சந்தேகத்தின்பேரில் பிடித்து சோதனை செய்தனர். அதில் பைகளில் 17 மதுபாட்டில்கள் இருந்தன. அதனை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த விஜயா (வயது 55), ராஜா (40) கதிரியப்பன் (65) என்பதும், மதுபானம் விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.