சாராயம் விற்ற பெண் உள்பட 3 பேர் கைது

கீழ்வேளூர் அருகே சாராயம் விற்ற பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-16 18:39 GMT

சிக்கல்:

கீழ்வேளூர் அருகே சாராயம் விற்ற பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரோந்து பணி

கீழ்வேளூர் அருகே தேவூர்- இரட்டைமதகடி சாலையில் கீழ்வேளூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தேவூர் அரசினர் மாணவர் விடுதி அருகே சாராயம் விற்ற வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் நாகை வடக்கு நல்லியான் தோட்டத்ைத சேர்ந்த ராஜா மகன் சதீஷ் (வயது 28) என்பது தெரிய வந்தது.

3 பேர் கைது

இதேபோல் ஆலங்குடி ராமாபுரம் பகுதியில் சாராயம் விற்ற அக்கரைப்பேட்டை, புதிய கல்லார் பகுதியை சேர்ந்த ராஜு மகன் திவாகர் (28), ஆலங்குடி ராமாபுரம் பகுதியை சேர்ந்த தவமணி மனைவி ராஜேஸ்வரி (47) ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 220 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்