வாலிபரை தாக்கிய சிறுவன் உள்பட 3 பேர் கைது

மேலப்பாளையத்தில் வாலிபரை தாக்கிய சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யபட்டனர்.

Update: 2023-08-11 21:47 GMT

மேலப்பாளையம்:

நெல்லை மேலப்பாளையம் கொட்டிகுளத்தை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 25). பேக்கரி கடை ஊழியர். இவர் நேற்று முன்தினம் பேக்கரி கடையின் குடோனை பூட்டிவிட்டு அந்த சாவியை உரிமையாளரிடம் கொடுக்க சென்றார். அப்போது அங்கு வந்த கொட்டிகுளத்தை சேர்ந்த சுப்பிரமணி (23), லட்சுமணபெருமாள் (21), 17 வயது சிறுவன் உள்பட 5 பேர் முன்பகை காரணமாக அண்ணாமலையை தாக்கினர். இதில் காயம் அடைந்த அண்ணாமலை, மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணி, லட்சுமணபெருமாள் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்