பிளஸ்-2 மாணவி உள்பட 3 பேர் தற்கொலை
வெவ்வேறு சம்பவத்தில் பிளஸ்-2 மாணவி உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
வெவ்வேறு சம்பவத்தில் பிளஸ்-2 மாணவி உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
மாணவி
துறையூர் அருகே உள்ள தவுட்டுப்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகள் கீர்த்திகா (வயது 16). இவர் கண்ணனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். சமீபத்தில் வெளியான தேர்வு முடிவில் அவர் தேர்ச்சி பெற்றார். இந்த நிலையில் நேற்று அவர் வீட்டில் யாரும் இல்லாதபோது, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் புலிவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொழிலாளி
திருச்சி தென்னூர் மீனாட்சி தோப்பு பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் (37). இவர் திருச்சி காந்தி மார்க்கெட்டில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்துவந்த இவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்தார். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் துறையூரில் உள்ள கோவில் திருவிழாவுக்கு சென்று இருந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த நத்தகுமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமான 4 மாதத்தில் பெண் தற்கொலை
மணப்பாறையை அடுத்த எஸ்.களத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சரத்குமார். இவருக்கும் சீ.வடக்கிப்பட்டியைச் சேர்ந்த கவிபிரியா (24) என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் களத்துப்பட்டியில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சாவில் மர்மம்
இது குறித்து தகவல் அறிந்த கவிபிரியாவின் உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் சாவில் மர்மம் உள்ளதாக மணப்பாறை போலீசில் புகார் செய்தனர். மேலும் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.