சாராயம் விற்ற கணவன்-மனைவி உள்பட 3 பேர் கைது
கீழ்வேளூர் அருகே சாராயம் விற்ற கணவன்-மனைவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்
சிக்கல்:
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள சங்கமங்கலம் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சங்கமங்கலம் வடக்குத்தெரு பகுதியில் அதே பகுதியை சேர்ந்த கந்தன் (வயது 43), அவரது மனைவி ஹேமலதா (36), நாகை அருகே உள்ள ஐவநல்லூர் மெயின் ரோட்டை சேர்ந்த பாலாஜி (44) ஆகிய 3 பேரும் அந்த பகுதியில் சாராயம் விற்றது தெரிய வந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் காரைக்கால், வாஞ்சூர் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 110 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.