பண மோசடி வழக்கில் கணவன்- மனைவி உள்பட 3 பேர் கைது

பண மோசடி வழக்கில் கணவன்- மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-22 20:01 GMT

வீரவநல்லூர் கிளாக்குளம் பகுதியைச் சேர்ந்த பேச்சியப்பன் (வயது 57) என்பவர், சேரன்மாதேவி பகுதியில் உள்ள ஆசிரியர்கள் கூட்டுறவு சங்கத்தில் செயலாளராக பணிபுரிந்து வருகிறார். வீரவநல்லூர் பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் சேரன்மாதேவி, காலங்கரை தெருவை சேர்ந்த லீனா (57) என்பவரும், அவருடைய சகோதரி பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் பகுதியை சேர்ந்த சலோமி (60), லிவிங்ஸ்டன் (29) என்பவரின் மனைவி பிரியா (27) மற்றும் அவர்களுடைய உறவினரான அருணாசலம் (44) ஆகியோர் சேர்ந்து ஆப் மூலமாக லீனா என்பவருடன் பணிபுரியும் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளின் தகவல்களை பெற்று சேரன்மாதேவியில் ஆசிரியர்களுக்கான கூட்டுறவு சங்கத்தில் அவர்களுடைய முகவரியில் அவர்களுடைய புகைப்படத்தை மாற்றியும், ஆசிரியர்களுடைய கையொப்பம் போலவே போலியாக கையொப்பத்தை போட்டு ரூ.54 லட்சம் கடனாக பெற்று பணமோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து பேச்சியப்பன் கொடுத்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி பண மோசடியில் ஈடுபட்ட ஆசிரியை லீனா மற்றும் சலோமி ஆகிய இருவரையும் கடந்த 4-ந்தேதி கைது செய்தனர்.

இந்தநிலையில் போலீசார்் தேடி வந்த லிவிங்ஸ்டின் (29), அவருடைய மனைவி பிரியா (27), மற்றும் லிவிங்ஸ்டின் உறவினரான அருணாச்சலம் (44) ஆகியோரை நேற்று கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.67 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். கைதான லிவிங்ஸ்டன் மீது பல வழக்குகள் உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்