கஞ்சா விற்க முயன்ற சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது

திட்டக்குடியில் கஞ்சா விற்க முயன்ற சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது

Update: 2023-06-24 18:45 GMT

திட்டக்குடி

திட்டக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாக்யராஜ் தலைமையிலான போலீசார் பஸ் நிலையத்தில் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது டீ கடை அருகில் நின்று கொண்டிருந்த வாலிபர்கள் சிலர் ஓட்டம் பிடித்தனர். உடனே போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் விருத்தாசலம், ராமச்சந்திரன் பேட்டை, விநாயகர் கோவில்தெருவை சேர்ந்த கந்தசாமி மகன் அன்புசெல்வன்(வயது 20), பெரம்பலூர் மாவட்டம் லப்பைகுடிக்காடை சேர்ந்த 17 வயது சிறுவன், கோழியூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோர் என்பதும், விற்பனைக்காக கஞ்சாவை வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்