2½ கிலோ கஞ்சா விற்ற பெண் உள்பட 3 பேர் கைது

2½ கிலோ கஞ்சா விற்ற பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-05-04 19:00 GMT

கந்தர்வகோட்டை பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தனிப்படை பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், தனிப்படை போலீசார் நேற்று அக்கட்சிப்பட்டி கிராம பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கல்லுக்குழி பகுதியில் கஞ்சா விற்று கொண்டிருந்த ராஜேந்திரன் மனைவி உமா (வயது 45), சாமிதுரை மகன் அருண்குமார் (25), கனி மகன் கலைவாணன் (24) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 2 கிலோ 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 3 பேரையும் கந்தர்வகோட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்