போலீஸ்காரர் உள்பட 3 பேர் காயம்

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில், போலீஸ்காரர் உள்பட 3 பேர் காயமடைந்தனர்.

Update: 2023-05-09 21:15 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள சந்திராபுரத்தை சேர்ந்தவர் அருள்குமார் (வயது 32). போலீஸ்காரரான இவர் கோவை ஐ.ஜி. அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி ரம்யா (23). இவர்களது மகன் இளமுகில் (3). இந்தநிலையில் அருள்குமார் தாராபுரம் ரோட்டில் சந்திராபுரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் மனைவி, குழந்தையுடன் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் அருள்குமார் மற்றும் அவரது மனைவி, மகன் காயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின், மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் விபத்தை ஏற்படுத்திய கார் நிற்காமல் சென்றதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்