கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 3 பேர் கைது
கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட கீழப்பழுவூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமையன் தலைமையிலான போலீசார் வாரணவாசி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிறுவன் உள்பட 3 பேர் கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவர்கள் மேலப்பழுவூர் கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் (வயது 20), திருமானூரை சேர்ந்த கருப்பையா (21) மற்றும் 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்த கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.